ADDED : ஜூன் 16, 2024 02:02 AM
விருதுநகர்:விருதுநகர் மார்கெட்டில் துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ. 2500 உயர்ந்து ரூ. 16,500, முண்டு வத்தல் 100 கிலோவிற்கு ரூ. 2000 குறைந்து ரூ. 11,000 முதல் ரூ. 18,000, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோவிற்கு ரூ. 1300 குறைந்து ரூ. 9200 என விற்கப்படுகிறது.
இங்கு கடலை எண்ணெய் 15 கிலோ ரூ. 2750, ந.எண்ணெய் 15 கிலோ ரூ. 6105, பாமாலின் 15 கிலோ ரூ. 1435, சீனி 50 கிலோ ரூ. 2120, ரவை 30 கிலோ ரூ. 1480, மைதா 90 கிலோவிற்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 4490, பொரிகடலை 55 கிலோவிற்கு ரூ. 100 குறைந்து ரூ. 5500, கொண்டக்கடலை 100 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 7250 என விற்கப்படுகிறது.
தொலிபருப்பு 100 கிலோ ரூ. 10,400, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 10,450, உளுந்து லயன் 100 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ.10,500, பட்டாணி பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 5400, உளுந்து நாடு 100 கிலோ ரூ. 9100, உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ. 12,600, என விற்பனை செய்யப்படுகிறது.
மல்லி லயன் 40 கிலோ ரூ. 3400 முதல் ரூ. 3550, மல்லி நாடு 40 கிலோ ரூ. 3500 முதல் ரூ. 3800, குண்டூர் வத்தல் 100 கிலோ ரூ. 16,000 முதல் ரூ. 19,000, வத்தல் நாடு 100 கிலோ ரூ. 10,000 முதல் ரூ. 16,000, கடலை புண்ணாக்கு 100 கிலோவிற்கு ரூ. 200 குறைந்து ரூ. 5300, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 2000 என விற்பனை செய்யப்படுகிறது.

