ADDED : ஏப் 10, 2024 05:28 AM

பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் சரித்திர மக்கள் தரிசன யாத்திரை நடத்தியிருக்கிறார். மக்கள் மிகச்சிறப்பான வரவேற்பு அளித்தனர்; சென்னையின் சொந்த மகனை ஆரத்தழுவுவதை போல, சென்னை மக்கள் மோடியை அன்புடன், ஆரத்தழுவி இருக்கின்றனர். இது, கள யதார்த்தத்தையும், கள நிலவரத்தையும் காட்டுகிறது. நிச்சயமாக, சென்னையின் மூன்று தொகுதிகளும் பா.ஜ., வசம் வரும்.
பிரதமர் மோடி மிகவும் சந்தோஷப்பட்டார். மக்களின் அன்பு மிகப்பெரிய அன்பாக இருந்தது. வழக்கத்தை விட, 'ரோடு ேஷா' நிகழ்ச்சியால் அனைத்து மக்களையும் பார்த்து கை அசைத்தபடி வந்தார். அவர், மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
பிரதமர், தமிழகத்தையும், தமிழக மக்களையும் அதிகம் விரும்புகிறார். அவரின் வருகை, தேர்தலில் மிகப்பெரிய எதிரொலி இருக்கும். ஜூன் 4ல் பார்த்தால், பிரதமரின் தாக்கம் தெரியும்.
- அண்ணாமலை,
தமிழக பா.ஜ., தலைவர்.

