நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ.6,772 கோடி ஒதுக்கீடு: 12 துறைகளுக்கு பகிர்ந்தளிப்பு
நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ.6,772 கோடி ஒதுக்கீடு: 12 துறைகளுக்கு பகிர்ந்தளிப்பு
ADDED : ஆக 26, 2024 03:29 AM

சென்னை: கட்டுமான திட்ட அனுமதியின் போது வசூலான, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் மேம்பாட்டுக்கான நிதி, 6,772 கோடி ரூபாய், 12 துறைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் போது, உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்காக, 10.70 சதுரடிக்கு, 264 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அந்த வகையில், 2007 முதல் நடப்பு ஆண்டு வரை, 5,688 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுஉள்ளது.
இருப்பினும், 2025 - 26ம் நிதியாண்டு வரை வசூலாகும் தொகையை உத்தேசமாக கணக்கிட்டு, 12 துறைகளுக்கு, 6,772 கோடி ரூபாயை பகிர்ந்து அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நகராட்சி, மாநகராட்சிகளுக்கு, 3,214 கோடி ரூபாய்; நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு, 1,438 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
'இதை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட துறைகள், பொதுவான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்' என்றார்.

