ADDED : ஏப் 01, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
தி.மு.க., தன் தேர்தல் வாக்குறுதியில், 'அனைத்து மகளிருக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்குவோம்' என்று கூறி தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால், தற்போது வெறும் 30 சதவீத மகளிருக்கு மட்டுமே மாதம் 1,000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படுகிறது.
'எனக்கு ஏன் 1,000 ரூபாய் நீங்கள் வழங்கவில்லை' என்று, ஒரு சகோதரி முதல்வர் ஸ்டாலினிடம் இன்று கேள்வி கேட்டுள்ளார். 'நீங்கள் இந்த கேள்வியை கேட்பதே தவறு' என்று அந்த சகோதரியிடம் ஸ்டாலின் சொல்கிறார். இந்த ஆணவம், தி.மு.க.,வின் பிறவி குணம். தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள், தி.மு.க.,வை இந்த தேர்தலில் முழுவதுமாக நிராகரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

