ADDED : பிப் 26, 2025 06:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று மதியம் 2:15 மணிக்கு, சென்னையில் இருந்து சேலம் செல்லும் விமானத்தில் பயணித்தார்.
அந்த விமானத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் பா.ம.க., தலைவர் அன்புமணி ஆகியோர் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
ஸ்டாலின், பன்னீர்செல்வம் இருவரும் விமான நிலையத்திற்கு வந்த பின்பும், அன்பு மணி மட்டும் வரவில்லை.
முதல்வருடன் பயணிக்க விரும்பாததால், அவர் விமான பயணத்தை ரத்து செய்து விட்டு, காரில் சேலம் சென்றதாக கூறப்படுகிறது.