ADDED : மார் 26, 2024 05:43 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபுவை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாக கூறி 2023 டிச.1ல் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரியை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
8 முறையாக காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு ஜாமின் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு திண்டுக்கல் நீதிமன்றம்,உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்யப்பட்ட நிலையில் நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
நீதிமன்ற வேலை நாட்களில் தினமும் காலை 10:00 மணிக்கு திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி அங்கித்திவாரி நேற்று முதல்நாளாக தன் தந்தை,தாயுடன் நீதிமன்றம் வந்து கையெழுத்திட்டார்.
பின்னர் அவர்கள் வெளியேவந்தபோது நிருபர் ஒருவர் அதை அலைபேசியில் வீடியோ எடுத்தார். இதை பார்த்து ஆவேசமடைந்த அங்கித்திவாரியின் தந்தை நிருபரின் அலைபேசியை பறித்தார்.

