ADDED : மார் 11, 2025 12:50 AM

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:
பதற்றத்தில் பிதற்றும், தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்.
1. தி.மு.க.,வினர் நேர்மையற்றவர்கள், நாகரிகமற்றவர்கள் என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லி இருக்கிறார்?
2. மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்கள், யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் நடத்தும் சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை நடத்தும், உங்கள் கட்சியினரும், அவர்களது உறவினருமா?
3. யார் அந்த சூப்பர் முதல்வர்?
ஏழை மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என, தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்து விட்டது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதற்கிடையில், பார்லிமென்டில் தி.மு.க., -- எம்.பி.,க்கள் குறித்து அவதுாறாக பேசியதாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை தி.மு.க.,வினர் எரித்து, திருச்சியில் போராட்டம் நடத்தினர். இதில், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.