சர்வதேச அரசியல் பாடம் படிக்க அண்ணாமலை லண்டன் பயணம்
சர்வதேச அரசியல் பாடம் படிக்க அண்ணாமலை லண்டன் பயணம்
ADDED : ஆக 28, 2024 08:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, லண்டன் புறப்பட்டு சென்றார்.
இங்கிலாந்தின் லண்டன் நகரில், சர்வதேச புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலை உள்ளது. இதில், சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர்ந்து படிக்க, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு, கட்சி தலைமை அனுமதி அளித்தது.
அதைத் தொடர்ந்து, புத்தாய்வு படிப்புக்காக, அண்ணாமலை நேற்று அதிகாலை லண்டன் புறப்பட்டு சென்றார். இதற்காக, அதிகாலை 2:30 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்த அண்ணாமலையை, பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பூங்கொத்து கொடுத்து, உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.
அதிகாலை 4:00 மணிக்கு, சென்னையில் இருந்து எமிரேட்ஸ் பயணியர் விமானத்தில், துபாய் வழியாக லண்டன் சென்ற அண்ணாமலை, படிப்பை முடித்து, நவம்பர் இறுதியில் தமிழகம் திரும்ப உள்ளார்.