ADDED : ஏப் 17, 2024 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை சென்ட்ரலில் இருந்து கர்நாடகா மாநிலம், பெங்களூரில் உள்ள ஒயிட்பீல்டுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று, 20ம் தேதி அதிகாலை 5:35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அதேநாளில் மதியம், 12:00 மணிக்கு ஒயிட்பீல்டுக்கு செல்லும்
ஒயிட்பீல்டில் இருந்து இன்று, 20ம் தேதி மதியம் 1:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் அதேநாளில் இரவு 7:00 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரும்
இந்த சிறப்பு ரயில்கள் பெரம்பூர், அரக்கோணம், வாலாஜா ரோடு, காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

