ADDED : ஜூலை 15, 2024 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி, திருவானைக்காவல் திருவளர்ச்சோலையில், காதல் விவகாரம் தொடர்பாக, இரு தரப்பினர் இடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பை சேர்ந்த நெப்போலியன், 29, கதிரவன், 40, சங்கர் குரு, 37, கமலேஷ், 20, ஜீவானந்தம் உட்பட, ஆறு பேருக்கு கத்திகுத்து விழுந்தது.
சம்பவ இடத்தில் நெப்போலியன் உயிரிழந்தார். மற்றவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கதிவரன், நேற்று காலை உயிரிழந்தார்.

