ADDED : மார் 04, 2025 06:55 PM
உங்கள் சகோதாரரின் ஆட்சியில், தமிழகத்தில் கல்வி தரம் மோசமடைந்து வருகிறது. எண்ணும் எழுத்தும், இல்லம் தேடி கல்வி, காலை உணவு திட்டம் ஆகியவை, புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றுள்ளன.
இதை ஒரு எம்.பி.,யாக கனிமொழியாகிய நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
தி.மு.க.,வை பொறுத்தவரை, குழந்தைகளின் எதிர்காலத்தை விட, அரசியல் தான் முக்கியம். இந்த கல்வியாண்டு முதல் பி.எம்.ஸ்ரீ., பள்ளி திட்டம் செயல்படுத்தப்படும் என்று, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புமாறு, தி.மு.க., அரசை, தமிழக பா.ஜ., கட்டாயப்படுத்தியதா?
பா.ஜ., எழுப்பும் கேள்விக்கு, முதல்வரும், துணை முதல்வரும் பதில் அளிப்பதை தவிர்க்கின்றனர்.
உங்கள் குடும்பத்தினரும், அமைச்சர்களும் நடத்தும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பு வழங்கப்படும்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏன் மறுக்கப்படுகிறது என்பதற்கு, நீங்களாவது பதில் அளிக்க வேண்டும்.
அண்ணாமலை, தலைவர் தமிழக பா.ஜ.,