ADDED : ஜூலை 11, 2024 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரியில், 960க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட, பி.என்.ஒய்.எஸ்., என்ற யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்பிற்கான சேர்க்கை, ஜூன் 23ல் துவங்கியது.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில், இம்மாதம், 8ம் தேதி வரை, 1,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் அவகாசத்தை, வரும் 22 மாலை 5:00 மணி வரை நீட்டித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை அறிவித்து உள்ளது.

