ADDED : மே 25, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:முழுநேரமாக முனைவர் பட்ட ஆய்வுக்கு பதிவு செய்து, சான்றிதழ் பெற்று இருப்போரில் தகுதியானோருக்கு, செம்மொழி நிறுவனம் உதவித்தொகை வழங்க உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை, www.cict.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்று, வரும் 31ம் தேதிக்குள், 'பதிவாளர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழி சாலை, பெரும்பாக்கம், சென்னை - 600 100' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வாகும் ஆய்வாளருக்கு, இரண்டு ஆண்டு களுக்கு மாதம் 30,000 ரூபாய் உதவித் தொகையும், ஆண்டுக்கு 18,000 ரூபாய் பிற செலவின தொகையும் வழங்கப்படும்.

