ADDED : ஜூலை 12, 2024 11:37 PM
சென்னை:கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை யின் நிர்வாக அறங்காவலரின் அறிவிப்பு:
கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, 12 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான கல்வி உதவித்தொகைக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2, பாலிடெக்னிக், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பட்டம், பட்ட மேற்படிப்பு மாணவர்கள், தாங்கள் கடைசியாக எழுதிய தேர்வில் குறைந்தபட்சம் 80 சதவீத மதிப்பெண்; பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை, 'www.kalkionline.com' என்ற இணையதளத்தில் இருந்து தரவிறக்கி, பூர்த்தி செய்து, 'நிர்வாக அறங்காவலர், கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை, கீதம் முதல் மாடி, எண் 14, நான்காவது பிரதான சாலை, கஸ்துார்பா நகர், அடையாறு, சென்னை - 600 020' என்ற முகவரிக்கு, இம்மாதம் 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, 94440 73803, 98401 60441 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

