ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 11, 2024 01:40 AM
சென்னை:தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள, 'ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட்' பணிக்கு தகுதியுள்ளோர், வரும், 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, துறையின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து, அவரது அறிக்கை:
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், 'ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபிஸ்ட்' பணியிடம் காலியாக உள்ளது. ஆணையத்தின் நேரடி நியமன பணியிடம் என்பதால், இந்தியா அல்லது வெளிநாடுகளில் முதுகலை பிசியோதெரபி, ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபி முடித்த, 21 வயதானோர், வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை, 'உறுப்பினர் செயலர், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு விளையாட்டரங்கம், ராஜா முத்தையா சாலை, பெரியமேடு, சென்னை - 600 003' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், தகவல் 'www.sdat.tn.gov.in' என்ற இணையதளத்தில் அறியலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

