அரசு ஊழியர்கள் அடிமைகளா? : வானதி , பாஜ., தேசிய மகளிரணி தலைவர்
அரசு ஊழியர்கள் அடிமைகளா? : வானதி , பாஜ., தேசிய மகளிரணி தலைவர்
ADDED : ஏப் 28, 2024 01:01 AM

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, ஆயந்துார் கிராம ஓட்டுச்சாவடியில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வி.ஏ.ஓ., சாந்தியை, தி.மு.க., மாவட்ட கவுன்சிலர் ராஜிவ் காந்தி காலால் எட்டி உதைத்துள்ளார். தகாத வார்த்தைகளை கூறி அவமதித்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்த பின், அரசு ஊழியர்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதை உணர்ந்த போலீசார், வேறு வழியின்றி ராஜிவ் காந்தியை கைது செய்துள்ளனர்.
அரசு ஊழியரையே காலால் எட்டி உதைக்கும் அளவுக்கு, அதிகார போதையில் இருக்கும் தி.மு.க.,வினர், மக்களிடம் எப்படி நடப்பர் என்பதை நினைக்கும் போதே அதிர்ச்சியாக இருக்கிறது. கைது செய்ததோடு கடமை முடிந்து விட்டதாக கருதாமல், சட்டப்படி உரிய தண்டனையை பெற்று தர வேண்டும்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே அக்கட்சியினர், அரசு ஊழியர்களை தங்களது அடிமை என்று கருதுகின்றனர். நியாயமாக செயல்படும் ஊழியர்களை தாக்குவது, ஆபாசமாக திட்டுவது போன்ற அராஜகங்களில் ஈடுபடுகின்றனர். இது, தி.மு.க.,வினர் வழக்கமாக மாறி விட்டது. தி.மு.க.,வினரின் அராஜகங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.
- வானதி,
பா.ஜ., தேசியமகளிரணி தலைவர்.

