ADDED : பிப் 27, 2025 08:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தேனியில் பழனிசாமி பேசும் பொதுக் கூட்டத்திற்கு, 50 ஆயிரம் பேரை திரட்ட திட்டமிட்டப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தொகுதியான பெரியகுளத்தில், வரும் 2ம் தேதி நடக்கும் அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பேசுகிறார். அதில், 50 ஆயிரம் தொண்டர்களை பங்கேற்க வைக்க, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்துள்ளார்.
பன்னீர்செல்வத்தின் கோட்டையான, தேனி மாவட்டத்தில் தன் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில், ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை, பழனிசாமி திட்டமிட்டு நடத்துகிறார்.

