செயற்கை அறிவு... இயற்கை 'குரல்'... திறம்பட நேர்காணல்!
செயற்கை அறிவு... இயற்கை 'குரல்'... திறம்பட நேர்காணல்!
ADDED : ஏப் 07, 2024 02:06 AM
நம் நாட்டில், வெளிநாட்டு நிறுவனங்கள் நிர்வாக மற்றும் உள் அலுவலகப் பணிகளை மேற்கொள்வதற்காக (back office processing) துவக்கத்தில் இருந்தே ஆட்கள் தேவை அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான வேலைக்கு ஆட்கள் தேடும் நிறுவனங்கள் புதிதாக வந்துஉள்ளன.
நுாறு பேர் ஒரு நிறுவனத்துக்கு தேவை என்றால் ஆயிரம் பேரிடம்போன் செய்து பேசி அவர்களிடம் 'முன் நேர்காணல்' நடத்தி அதன் பின், அந்தந்த நிறுவனங்களுக்கு நேர்காணலுக்கு அனுப்புவது என்பது ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு கடினமான வேலை. ஒரு நிறுவனத்துக்கு 1000 பேர் வரை தேவை என்றால் அது இன்னும் எவ்வளவு கடினமாக இருக்கும்!
குரல் தான்அடிப்படை
'குரல்'தான் மனிதகுலத்தின் முதன்மையான தகவல்தொடர்பு முறையாக இன்றளவும் செயல்படுகிறது.
'ரூட்டில்' (Rootle) என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனம்,பணிக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் போது 'முன் நேர்காணல்' நடத்தி அவர்களை அழைக்கும் போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.
ஒவ்வொருவரையும் நாமே அழைத்து பேசுவதில் பல நன்மைகள் உண்டு; ஆனால், அழைக்கும் போது பாதி நேரங்களில் அவர்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை. வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பல சமயங்களில் வெறுப்பாகி விடுகிறோம். சரியான திறமையைக் கண்டறிய ஒவ்வொரு நாளும் நுாற்றுக்கணக்கான அழைப்புகளைச் செய்வது ஆட்சேர்ப்பு செய்பவர்களுக்கு சோர்வைத் தருகிறது.
00
இயற்கை உரையாடல்கள்
இதற்கு தீர்வு செயற்கை தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்படும் 'குரல் நேர்காணல்கள்'தான். 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், தானியங்கி அழைப்பு மூலம், அழைக்கும் நபர் தொடர்பு கொள்ளும் வரை பல தடவை தொடர்பு கொள் கின்றன. தொடர்பு கிடைத்தவுடன் 'குரல் நேர்காணல்' துவங்கும். நிஜ மனித தொடர்புகளைப் பிரதிபலிக்கும் இயற்கையான ஒலி உரையாடல் களை உருவாக்க இது உதவுகிறது.
இது நேரத்தையும், முயற்சியையும் மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல், சாத்தியமான வேலை தேடுவோருடன் தொடர்புகளை உறுதி செய்கிறது.
நிர்வாகச்சுமை குறைகிறது
இது ஆட்சேர்ப்பு செய்பவர்களின் நிர்வாகச் சுமையைக் குறைப்பது மட்டுமல்லாமல், முழு நேர்காணல் செயல்முறையையும் துரிதப்படுத்துகிறது; பணியமர்த்தல் மற்றும் செலவுக்கான நேரத்தை மிச்சப்படுத்துகிறது. இது அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களைக் கையாள்பவர்களுக்கு நன்மை அளிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு மூலம் ஒரே நேரத்தில் பல நேர்காணல்களை திறமையாக கையாள முடியும். இது தேர்வாளர்கள் மதிப்பீட்டின் தரத்தை சமரசம்செய்யாமல் பார்த்து கொள்ளவும் உதவுகிறது.
- சேதுராமன் சாத்தப்பன் -
மேலும் விபரங்களுக்கு: www.rootle.ai.
சந்தேகங்களுக்கு
இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com
அலைபேசி: 98204 51259
இணையதளம்: www.startupandbusinessnews.com

