ADDED : மார் 26, 2024 03:57 AM
சென்னை : பிரதமர் மோடி குறித்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவதுாறாக பேசிய விவகாரம் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் தேர்தல் கமிஷன் அறிக்கை கேட்டுள்ளது.
துாத்துக்குடி தொகுதியில் நடந்த தி.மு.க., பொதுக்கூட்டத்தில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், அநாகரிகமான முறையில், பிரதமர் மோடியை விமர்சித்தார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பா.ஜ., சார்பில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், நேற்று முன்தினம் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி சதயபிரதா சாஹு கூறியதாவது:
அமைச்சர் மீதான புகார் மனு, டில்லி தலைமை தேர்தல் கமிஷனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட தேர்தல் அலுவலரிடமும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
அவர் முழுமையாக விசாரித்து அறிக்கை அளிப்பார். அதன் அடிப்படையில் தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
