ADDED : செப் 09, 2024 04:47 AM
கண்டமங்கலம்: கண்டமங்கலம் அருகே ஊராட்சி செயலரின் தம்பியை தாக்கிய லாரி புரோக்கரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கோண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 32; லாரி புரோக்கர்.
இவர் 15 நாட்களுக்கு முன் தனது நண்பர் மதி யழகனுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடு ஒதுக்கும்படி ஊராட்சி செயலர் நாகராஜிடம் கூறியுள்ளார்.
அதற்கு, நான் ஒன்றும் செய்ய முடியாது, ஊராட்சி தலைவரிடம் கூறுங்கள்' என, நாகராஜ் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் நாகராஜை திட்டி, மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து 20க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்கள், நாகராஜிக்கு ஆதரவாக கண்டங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர்.
தனக்கு எதிராக புகார் கொடுக்க, பாக்கம் ஊராட்சி செயலர் சுப்ரமணியன்தான் காரணம் என எண்ணிய மணிகண்டன், கடந்த 6ம் தேதி இரவு தனது நண்பர் வினோத்குமாருடன், சுப்ரமணியன் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார்.
வீட்டில் இருந்த சுப்ரமணியன் தம்பி கண்ணனை தாக்கினர்.
இது குறித்த புகாரின்பேரில் கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து, மணிகண்டனை நேற்று கைது செய்து, வினோத்குமாரை தேடி வருகின்றனர்.