காலை 6:00 மணிக்கு டி.ஆர்.பாலு ஆஜர்: பெண்கள் வராததால் தி.மு.க.,வினர் கதறல்
காலை 6:00 மணிக்கு டி.ஆர்.பாலு ஆஜர்: பெண்கள் வராததால் தி.மு.க.,வினர் கதறல்
ADDED : ஏப் 07, 2024 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்: ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, தினம் காலை 6:00 மணிக்கு பிரசாரத்திற்கு கிளம்பி விடுகிறார்.
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க, காலை 5:00 மணிக்கே தயாராகி, 6:00 மணிக்கு பிரசார பகுதிக்கு வந்துவிடுகிறார். ஆனால், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், தொண்டர்கள் ஆகியோர், அந்நேரத்திற்கு அங்கு வருவதில்லை.
இதனால் கடுப்பாகும் அவர், முக்கிய நிர்வாகிகளுக்கு மொபைல் போனில் அழைத்து, சீக்கிரம் வரும்படி எரிச்சலுாட்டுகிறாராம்.
https://election.dinamalar.com/index.php

