ADDED : ஆக 17, 2024 01:45 AM

1957அத்திக்கடவு - அவிநாசி கால்வாய் திட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற குரல் ஒலிக்க துவங்கியது
1967அப்போதைய அவிநாசி எம்.எல்.ஏ., மாரப்ப கவுண்டர், அத்திக்கடவு திட்டத்தை கொண்டு வர, அப்போதைய முதல்வர் காமராஜரிடம் வலியுறுத்தினார்
1972திட்டத்தை செயல்படுத்த கொள்கை முடிவெடுக்கப்பட்டது
1996 தி.மு.க., ஆட்சியில் திட்டம் தொடர்பான விரிவான ஆய்வு மேற்கொள்ள, அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்
காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் மோகன கிருஷ்ணன், ஆய்வறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தார்
2014அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 'மத்திய அரசு நிதி ஒதுக்கினாலும், ஒதுக்காவிட்டாலும் திட்டம் நிறைவேறும்' என்றார். பாசன திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் அவர் வழங்கிய விரிவான திட்ட அறிக்கையில் இத்திட்டமும் இடம் பெற்றிருந்தது
2018 ஜெ., மறைவுக்கு பின், அப்போதைய முதல்வர் பழனிசாமி, திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த உத்தரவிட்டார். மத்திய அரசு உட்பட எந்தவொரு நிதி ஆதார அமைப்பின் உதவியையும் எதிர்பார்க்காமல், 1,652 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கினார்
2019 பிப்., 28திருப்பூர் மாவட்டம், அவிநாசி, புதுப்பாளையத்தில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில், பழனிசாமி தலைமையில் அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது
2021கொரோனாவால் சொந்த ஊர் சென்ற பணியாளர்களை எல் அண்டு டி., நிறுவனத்தினர் மேற்கு வங்கத்தில் இருந்து 1,400 தொழிலாளர்களை விமானத்தில் அழைத்து வந்து பணிகளை தொடர்ந்தனர்
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது
2022 ஆக.,முதல்வர் ஸ்டாலின், திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டார். திட்டத்துக்கு கூடுதல் நிதி தேவைப்பட்ட நிலையில், அதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, பணிகள் தொடர்ந்தன. 1,652 கோடி ரூபாயில் துவங்கிய திட்டம், 1,916 கோடி ரூபாயில் நிறைவு செய்யப்பட்டது.

