ADDED : ஜூன் 09, 2024 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையம் பின்புறம், முத்தானந்தபுரம் தெருவில் மருத்துவமனை முன், டி.பி.எஸ்., என்ற வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது.
இந்த மையத்தில் நேற்று அதிகாலையில் மர்ம நபர் உள்ளே நுழைந்து இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி செய்து உள்ளார்.
அப்போது, பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த அலாரம் திடீரென ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர், தன் முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்திலேயே நடந்த துணிகர முயற்சி, அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

