sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐந்து கைத்தறி ரகங்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி

/

ஐந்து கைத்தறி ரகங்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி

ஐந்து கைத்தறி ரகங்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி

ஐந்து கைத்தறி ரகங்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி


ADDED : ஜூன் 28, 2024 02:39 AM

Google News

ADDED : ஜூன் 28, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:“சின்னாளப்பட்டி செயற்கை பட்டு சேலை உள்ளிட்ட ஐந்து கைத்தறி ரகங்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்,” என, கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் அவரது அறிவிப்புகள்:

 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள நெசவாளர்களுக்கு வழங்கப்படும் கூலியில், 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்

 கைத்தறி நெசவாளர்கள் 3,000 பேருக்கு, 3 கோடி ரூபாயில், தறிகள், தறி உபகரணங்கள் வழங்கப்படும்

 கைத்தறி துணிகள் விற்பனையை அதிகரிக்க, சென்னை தீவுத்திடலில் தேசிய கைத்தறி கண்காட்சி, 2 கோடி ரூபாய் செலவிலும்; கோவை, சேலம், திருச்சி, திருப்பூரில், மாநில சிறப்பு கண்காட்சிகள், 1.29 கோடி ரூபாயிலும் நடத்தப்படும்

 2,000 நெசவாளர் பயன்பெறும் வகையில், 20 கோடி ரூபாயில், 10 புதிய கைத்தறி குழுமங்கள் உருவாக்கப்படும்

 ஈரோடு, கரூரில் உள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், 35 லட்சம் ரூபாயில் மெல்லிய மெத்தைகள் தைக்கும் இயந்திரம் நிறுவப்படும்

 வேலுார் மற்றும் நாகர்கோவிலில், 1.50 கோடி ரூபாயில், இரு சாய சாலைகள் அமைக்கப்படும்

 சின்னாளபட்டி செயற்கை பட்டு சேலைகள், கூரைநாடு சேலைகள், நாகர்கோவில் வேட்டிகள், உறையூர் சேலைகள், குடியாத்தம் லுங்கிகள் ஆகிய, ஐந்து கைத்தறி ரகங்களுக்கு புவிசார் குறியீடு பெறப்படும்

 ஈரோட்டில் உள்ள தமிழக கூட்டுறவு துணிநுால் பதனிடும் ஆலையில், 1.50 கோடி ரூபாய் செலவில் புதிய பல வண்ண, 'இங்க்ஜெட் பிரின்டிங்' இயந்திரம் நிறுவப்படும்

 ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 900 சதுரடி இடத்தில், 66 லட்சம் ரூபாயில் விற்பனை நிலையம் அமைக்கப்படும்

 பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ.,க்களில் ஜவுளிகள் தொடர்பான படிப்புகள் அறிமுகம் செய்யப்படும்

 தமிழகத்தில் விளையாட்டு துறை சார்ந்த ஜவுளிகளின் உற்பத்தி மற்றும் சந்தைக்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us