பூர்விகாவில் ஆடி தள்ளுபடி - ரூ.10 கோடி பரிசுகள் அறிவிப்பு
பூர்விகாவில் ஆடி தள்ளுபடி - ரூ.10 கோடி பரிசுகள் அறிவிப்பு
ADDED : ஜூலை 31, 2024 12:38 AM
சென்னை:ஆடி மாதத்தை முன்னிட்டு, பூர்விகா நிறுவனம் அதிரடி சலுகைகளையும், 10 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளை வெல்லும், 'ஆன்லைன் அனுபவ பகிர்வு' போட்டியையும் அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி மொபைல் போன்கள் விற்பனை நிறுவனமான, 'பூர்விகா'வுக்கு, தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா, மஹாராஷ்டிராவில், 475க்கும் அதிகமான ஷோரூம்கள் உள்ளன.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில், 17க்கும் மேற்பட்ட பூர்விகா அப்ளையன்ஸ் ஷோரூம்களில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஆடி அதிரடி தள்ளுபடியில், அனைத்து முன்னணி வங்கி கார்டுகளுக்கும், 12 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி, 8,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், 20,000 ரூபாய் வரை உடனடி தள்ளுபடி, 'நோ காஸ்ட்' மாத தவணை வசதி, ஸ்மார்ட் போன்களுக்கு ஒரு முறை ஸ்கிரீன் ரீபிளஸ்மென்ட், அனைத்து பொருட்களுக்கும் ஜீரோ டவுண் பேமென்ட் வசதி என, அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை பொருட்கள் வாங்கினால், 3,999 ரூபாய் மதிப்புள்ள பிரபல பிராண்ட் இயர்பட்ஸ், 85 சதவீத தள்ளுபடியில் பெறலாம். 30,000 ரூபாய் வரை பொருட்கள் வாங்கினால், 10,498 ரூபாய் மதிப்புள்ள ஹாபி போலா காலிங் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் டி.டபுள்யூ.எஸ்., காம்போ, 40,000 ரூபாய் வரை பொருட்கள் வாங்கினால், 14,998 ரூபாய் மதிப்புள்ள ஹாபி போலா புளூடூத் ஸ்பீக்கர் மற்றும் பையர்போல்ட் காலிங் ஸ்மார்ட் வாட்ச் காம்போவை, 85 சதவீத தள்ளுபடியில் வாங்கலாம்.
ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குவோர், ஆன்லைன் அனுபவ பகிர்வு போட்டியில் பங்கேற்று, புதிய மஹிந்திரா சொகுசு கார், ஏர்கூலர்கள், டபுள் டோர் குளிர்சாதன பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், 55 இன்ச் ஸ்மார்ட் 'டிவி'கள், லேப்டாப்கள், மிக்ஸர் கிரைண்டர்கள், பெடஸ்டல் மின் விசிறிகள், ஏர் கன்டிஷனர்கள், ஸ்மார்ட் வாட்சுகள் போன்ற 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வெல்லலாம்.
பூர்விகாவின் ஆடி தள்ளுபடியை பயன்படுத்தி, உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் பூர்விகா ஷோரூம்கள் அல்லது www.poorvika.com இணையதளம் வாயிலாக வாங்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

