ADDED : ஆக 29, 2024 08:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சட்டவிரோதமாக ஓடும் 'பைக் டாக்சி'யை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்கம் சார்பில், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட செயலர் சம்பத் தலைமையில், அண்ணாசாலை தாராபூர் டவர் அருகே, நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக ஓடும் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும். உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட மீட்டர் கட்டண உயர்வை, உடனே அமல்படுத்த வேண்டும். 'ஆட்டோ ஆப்' துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.