அவிநாசி -அத்திக்கடவு திட்டம் துவக்கம்: குன்னத்துார் ஏரியில் மலர்துாவி வரவேற்பு
அவிநாசி -அத்திக்கடவு திட்டம் துவக்கம்: குன்னத்துார் ஏரியில் மலர்துாவி வரவேற்பு
ADDED : ஆக 18, 2024 01:01 AM

திருப்பூர்: அவிநாசி - அத்திக்கடவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டதும், குன்னத்துார் ஏரிக்கு வந்த தண்ணீரை, அமைச்சர் உள்ளிட்டோர் மலர்துாவி வரவேற்றனர்.
அவிநாசி - அத்திக்கடவு திட்டம் துவக்க விழாவை தொடர்ந்து, அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர், திருப்பூர் மாவட்டம், குன்னத்துார் ஏரியில் தண்ணீர் நிரம்புவதை பார்வையிட்டனர். தண்ணீரில் மலர்களை துாவினர்.
அமைச்சர் சாமிநாதன் கூறுகையில்,' காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறம், ஆண்டுக்கு, 1.50 டி.எம்.சி., உபரிநீர், வினாடிக்கு, 250 கன அடி வீதம், 70 நாட்களுக்கு, நீரேற்று முறையில், 1,085 கி.மீ., துாரம், குழாய் பதிக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறையின், 32 ஏரிகள், ஊராட்சிகளின், 42 குளங்கள், மற்றும் 971 குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கிடைக்கும். மூன்று மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவர்,'' என்றார்.

