sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மருந்து கழிவுகளால் காத்திருக்கும் பேராபத்து - மாநிலங்களிடம் பசுமை தீர்ப்பாயம் அறிக்கை கேட்பு

/

மருந்து கழிவுகளால் காத்திருக்கும் பேராபத்து - மாநிலங்களிடம் பசுமை தீர்ப்பாயம் அறிக்கை கேட்பு

மருந்து கழிவுகளால் காத்திருக்கும் பேராபத்து - மாநிலங்களிடம் பசுமை தீர்ப்பாயம் அறிக்கை கேட்பு

மருந்து கழிவுகளால் காத்திருக்கும் பேராபத்து - மாநிலங்களிடம் பசுமை தீர்ப்பாயம் அறிக்கை கேட்பு


ADDED : செப் 14, 2024 05:50 AM

Google News

ADDED : செப் 14, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மருந்து கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பேராபத்து குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, அனைத்து மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

சுற்றுச்சூழலில் மருந்து, நச்சுத்தன்மையின் தாக்கம் என்ற தலைப்பில், 'கரன்ட் சயின்ஸ்' ஆய்விதழில் ஆராய்ச்சி கட்டுரை வெளியானது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

வளர்ச்சி அதிகரிக்கும் போது, ரசாயன கழிவுகளும் அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ கழிவுகளால் நீர்நிலைகள் மாசடைகின்றன. 43 சதவீத ஆறுகள், மருந்து கழிவுகளால் ஆபத்தை எதிர்கொள்கின்றன.

தொடர்ச்சியாக மருந்து உட்கொள்ளும் மனிதர்கள், விலங்குகளின் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. அப்படி மாற்றங்கள் நிகழும் உயிரினங்கள் வெளியேற்றும் சிறுநீர்,

மலம் ஆகியவற்றாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. போதைப் பொருள் பயன்பாடுகளாலும் சுற்றுச்சூழல் மாசடைகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவத்சவா, நீதிபதி சுதிர் அகர்வால், நிபுணர் குழு உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

மருந்து கழிவுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள், உலகளாவியது. மருந்துகள் தவிர்க்க முடியாதவை. ஆனாலும், அதன் பாதிப்புகளை குறைக்க, கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நோய் எதிர்ப்பு சக்திக்கான, 'ஆன்டிபயாடிக்' மருந்து பயன்பாட்டை ஆராய்வது; மருந்து கழிவுகள் தொடர்பான கல்வி, ஆராய்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்குவது; மருந்து கழிவுகளை சரியான முறையில் அகற்றுதல்; போதை பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த விதிகளை கடுமையாக்குதல் போன்ற நடவடிக்கை வாயிலாக, மருந்து கழிவுகள் அபாயத்தை குறைக்க முடியும்.

இது, இந்தியா முழுவதற்குமான பிரச்னை என்பதால், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மட்டுமல்லாது, அனைத்து மாநில தலைமை செயலர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us