ADDED : ஆக 16, 2024 02:26 AM
சென்னை:மதுரை விளாச்சேரி ஐஸ்வர்யம் அறக்கட்டளைக்கு, சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிர்வாக டிரஸ்டி டாக்டர் பாலகுருசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் விருதை வழங்கி பாராட்டினார்.
ஐஸ்வர்யம் அறக்கட்டளை, 2014ம் ஆண்டு முதல் ஆதரவற்றோர், நோய்வாய்ப்பட்டோர், முதியோர் ஆகியோருக்கு, மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. வாழ்வில் இறுதி நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பான சேவை செய்து வருகிறது.
சென்னையை சேர்ந்த மீனா சுப்ரமணியனுக்கு, சிறந்த சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது. இவர் பிரயாஸ் அறக்கட்டளை வழியே சமூக சேவை செய்து வருகிறார். கடந்த 2012ம் ஆண்டு சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் 10 படுக்கைகள் கொண்ட டயாலிசிஸ் வசதி உள்ள மருத்துவ மையத்தை அமைத்தார். ஒரு நோயாளிக்கு 250 ரூபாய் செலவில், டயாலிசிஸ் செய்ய வழிவகுத்துள்ளார். நடமாடும் வேன்களை பயன்படுத்தி, ஆதரவற்ற முதியோருக்கு, இலவச மருத்துவ உதவிகளை செய்து வருகிறார்.