'பூத்' ஏஜென்ட்களுக்கு சுடச்சுட பிரியாணி, சிக்கன் வறுவல்
'பூத்' ஏஜென்ட்களுக்கு சுடச்சுட பிரியாணி, சிக்கன் வறுவல்
ADDED : ஏப் 18, 2024 12:04 AM
சென்னை:தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் தரப்பில் இருந்து, ஓட்டுப்பதிவின் போது ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு, காலை டிபன், மதியம் பிரியாணி, சிக்கன் வறுவல் வழங்கப்பட உள்ளன.
ஓட்டுச்சாவடிக்குள் அதிகாரிகளுடன், போட்டியிடும் வேட்பாளர்களின் சார்பில், 'பூத் ஏஜென்ட்' எனப்படும் ஓட்டுச்சாவடி முகவர்கள் மட்டுமே இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காலை ஓட்டுப்பதிவு துவங்கியது முதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வாகனத்தில் ஏற்றி, ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பும் வரை முகவர்கள், ஓட்டுச்சாவடியை விட்டு வெளியேறக் கூடாது.
அவர்களுக்கு சுடச்சுட உணவு வழங்க, சைவ உணவுக்கு தனியாகவும், பிரியாணிக்கு தனியாகவும் சமையல் கலைஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
காலை டிபனாக இட்லி, பொங்கல், பூரி, வடை, கேசரி பார்சல் செய்து, கட்சியினர் வாயிலாக காலை, 8:00 மணிக்குள் வழங்கப்பட உள்ளது. மதியம், தலா 75 கிராம் எடையில் நான்கு, 'பீஸ்' உடன் மட்டன் பிரியாணி, 5 'பீஸ்' உடன் சிக்கன் வறுவல் வழங்கப்பட உள்ளது.
மாலை, சுண்டல், ஒரு தோசை, 2 சப்பாத்தி குருமா, சாம்பார் வழங்கப்பட உள்ளது.
பா.ஜ., வேட்பாளர்கள், முகவர்களுக்கு உணவு வழங்க, ஹோட்டல்களில் ஆர்டர் தந்துள்ளனர்.
தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., வேட்பாளர்கள், ஓட்டுச்சாவடி முகவர்களை, எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை, ஏற்கனவே அதிக, 'கவனிப்பு' செய்துவிட்டனர்.

