பஸ் ஸ்டாண்ட் நுழைவு கட்டணம் உள்ளாட்சிகளுக்கு செலுத்த தடை
பஸ் ஸ்டாண்ட் நுழைவு கட்டணம் உள்ளாட்சிகளுக்கு செலுத்த தடை
ADDED : ஏப் 23, 2024 09:34 PM
அரசு பஸ்கள், தமிழகத்தின் முக்கிய பஸ் ஸ்டாண்டுகளுக்குள் சென்று பயணியரை ஏற்றி, இறக்கி செல்ல, உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்துகளுக்கு, 20 முதல், 100 ரூபாய் வரை கட்டணம் செலுத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு காலம் கடந்த மார்ச், 31ல் முடிந்தது.
இந்நிலையில் கோவை கோட்டம் ஈரோடு மண்டலம் சார்பில், கிளை மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
பஸ் ஸ்டாண்டுகளில் நுழைவு கட்டணம் செலுத்துவதற்கான அனுமதி காலம் முடிந்தும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்துகளில் இருந்து புதுப்பித்து அதற்கான கடிதம் அனுப்பப்படாமல் உள்ளது. அதனால் சேலம், ஈரோடு, கோவை, கும்பகோணம், வேலுார் உட்பட, 76 பஸ் ஸ்டாண்டுகளுக்கு உள்ளாட்சி அமைப்புக்களுக்கான நுழைவு கட்டணத்தை மறு உத்தரவு வரும் வரை, கண்டக்டர்கள் செலுத்த வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை காட்டி சேலம், விழுப்புரம், கும்பகோணம், நெல்லை, மதுரை, சென்னை, எஸ்.இ.டி.சி., நிர்வாக அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பஸ் ஸ்டாண்ட் நுழைவு கட்டணத்தை செலுத்த தடை விதித்துள்ளனர்.
- நமது நிருபர் -

