'பங்குச்சந்தை முறைகேடில் பார்லி., கூட்டுக்குழு விசாரணை அவசியம்!'
'பங்குச்சந்தை முறைகேடில் பார்லி., கூட்டுக்குழு விசாரணை அவசியம்!'
ADDED : ஆக 24, 2024 02:33 AM
சென்னை:''அதானியின் பங்குச்சந்தை முறைகேடுகள் குறித்து, மத்திய அரசு அமைப்புகள் விசாரித்தால் உண்மை வெளிவராது; பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்,'' என, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சந்தீப் தீக் ஷித் கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
உலகின், 6வது பெரிய பங்குச்சந்தையாக, இந்திய பங்குச்சந்தை விளங்குகிறது.
அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் செய்கையாக உயர்ந்தன. அதானியின் பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகளில், பங்கு சந்தை கட்டுப்பாட்டு வாரியமான, 'செபி' தலைவர் முதலீடு செய்துள்ளார்.
பங்குகள் செயற்கையாகவே உயர்வது இந்திய பொருளாதாரத்திற்கே ஆபத்தானது. 'செபி' தலைவராக தனியார் நிறுவனத்தை நடத்தியவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. அதானியின் பங்குகள் உயர்வு மற்றும் செபி தலைவர் முதலீடு குறித்து, மத்திய அரசு விசாரணை மேற்கொண்டால் உண்மை வெளிவராது.
எனவே, பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேணடும்.
இவ்வாறு அவர் கூறினார்.