கல்விக்கான தடைகள் புதிய வடிவில் எழ துவங்கியுள்ளது : ஸ்டாலின்
கல்விக்கான தடைகள் புதிய வடிவில் எழ துவங்கியுள்ளது : ஸ்டாலின்
ADDED : ஆக 01, 2024 07:45 PM

சென்னை : கல்விக்கான தடைகள் மீண்டும் புதிய வடிவில் எழ துவங்கி உள்ளன என லயோலா கல்லூரில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
கல்விதான் யாராலும் அழிக்க முடியாத செல்வம் . ஒருகாலத்தில் அது அனைவருக்கும் கிடைக்காத நிலை இருந்தது.
கல்வி தான் ஒருவரின் தடைகளை தகர்த்து, தலை நிமிரச் செய்யும் என்பதால் கல்விக்கு அதிக முக்கியத்துவம். எல்லோரும் படிக்கலாம் என வாசலை திறந்து விட்ட கல்லூரிகளில் லயோலா கல்லூரியும் ஒன்று.
அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.என்பதே மாநில அரசின் நோக்கம். உயர்கல்வி மற்றும்ஆராய்சி கல்வியின் பொற்காலமாக திகழ்கிறது.
இந்தியாவின் தலைசிறந்த கல்விநிறுவனங்கள் எல்லாம் தமிழகத்தில் உள்ளன.
புதிய வடிவில் கல்விக்கு தடைகள்
கல்விக்கான தடைகள் புதிய வடிவில் மீண்டும் துவங்கி உள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை குறைக்கும்வகையிலான புதிய பேச்சுக்கள் மீண்டும் புதிய வடிவில் எழ துவங்கி உள்ளன. இவ்வாறு முதல்வர் பேசினார்.