'பெல்' நிறுவன பொதுமேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
'பெல்' நிறுவன பொதுமேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ADDED : மார் 13, 2025 01:32 AM

திருவெறும்பூர்:திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள 'பெல்' நிறுவனத்தில் ஸ்டீல் டியூப் பிரிவின் பொதுமேலாளர் சண்முகம், 50. இவர், மனைவி பார்வதி மற்றும் பி.டெக்., படிக்கும் மகளுடன், கணேஷ் நகரில் வசித்தார்.
பார்வதி, பெல் மெட்ரிக்., பள்ளி ஆசிரியராக உள்ளார். நேற்று காலை வேலைக்கு சென்ற சண்முகம், மாலையில் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர், அவரை தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. இரவு, 1.30 மணிக்கு, அலுவலக கதவை உடைத்து பார்த்தபோது, அங்குள்ள சோபாவில், துப்பாக்கியால், அவர் தன் நெற்றில் சுட்டு தற்கொலை செய்து இறந்து கிடந்தார். பெல் போலீசார், உடலை மீட்டு விசாரிக்கின்றனர்.
சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், 'சண்முகத்துக்கு இதயக்கோளாறு இருந்துள்ளது. இதனால், விரக்தி அடைந்த நிலையில் இருந்த அவர், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது. அவரிடம் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் இல்லாத நிலையில், எங்கிருந்து துப்பாக்கி வாங்கினார் என விசாரிக்கிறோம்' என்றனர்.