தமிழகத்திற்கு இருமொழி போதும் கார்த்தி எம்.பி., பேச்சு
தமிழகத்திற்கு இருமொழி போதும் கார்த்தி எம்.பி., பேச்சு
ADDED : மார் 03, 2025 05:51 AM
மேலுார் : மதுரைமாவட்டம் மேலுார் அருகே முசுண்டகிரிப்பட்டியில் கட்சி நிர்வாகி திருமணத்தில் கலந்து கொண்ட காங்., கார்த்தி எம்.பி., பேசியதாவது :
தமிழகத்தில் தமிழ், ஆங்கில மொழிகள் போதுமானதாக உள்ளது. வட மாநில தொழிலாளர்கள் வேலைக்காக தமிழகம் வந்து தமிழ் மொழியை கற்று கொள்வது போல் தமிழர்களும் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் போது மற்ற மொழிகளை கற்றுக் கொள்வார்கள்.
மத்திய அரசு மூன்றாவது மொழி கட்டாயம் என்பது மறைமுக ஹிந்தியை திணிப்பது போல் உள்ளது.
தமிழகத்தில் ஹிந்தியை கற்றுக் கொள்ள சி.பி.எஸ்.இ., கேந்திர வித்யாலயா பள்ளிகள் உள்ளன. ஹிந்தி மொழி திணிக்கப்பட்டால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு தபால், ரயில்வே துறைகளில் வட மாநிலத்தவர் வந்ததுபோல் அரசு பள்ளிகளில் வடமாநில ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு தமிழ், பண்பாடு, மொழி அழியும் நிலை ஏற்படும்.
தமிழகத்தில் மூன்றாவது மொழியை ஏற்க முடியாது என்றார்.