கம்யூனிஸ்ட் கட்சிகளை விட திமுகவை எதிர்க்கும் பா.ஜ.,: திருமாவளவன்
கம்யூனிஸ்ட் கட்சிகளை விட திமுகவை எதிர்க்கும் பா.ஜ.,: திருமாவளவன்
ADDED : ஏப் 13, 2024 05:05 PM

அரியலூர்: ' முதல்வர் எடுத்துள்ள இந்த தேர்தல் வியூகம் பிரதமர் மோடி, அமித்ஷாவை நடுங்க வைத்துள்ளது. அதனால் தான் அகில இந்திய கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை விட திமுகவை எதிர்க்கின்றனர்' என திருமாவளவன் கூறினார்.
அரியலூரில் தேர்தல் பிரசாரத்தில் திருமாவளவன் பேசியதாவது: தேசிய அளவில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வியூகத்தை அமைத்துள்ளார். இந்திய ஜனநாயகத்தை குறிப்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்ற வேண்டும். மக்களுக்கு இண்டியா கூட்டணி துணை நிற்கும்.
முதல்வர் எடுத்துள்ள இந்த தேர்தல் வியூகம் மோடி அமித்ஷாவை நடுங்க வைத்துள்ளது. அதனால் தான் அகில இந்திய கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை விட திமுகவை எதிர்க்கின்றனர்.
தூக்கி எறியுங்கள்!
குடும்ப ஆட்சி என்கின்றனர். தமிழ் பிடிக்கும் என்கின்றனர். பிரதமர் மோடியை வீட்டுக் அனுப்ப வேண்டும். பாஜ.,வை தூக்கி எறிய வேண்டும். நாம் ஸ்டாலினுக்கு துணையாக இருக்க வேண்டும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நாட்டின் அடித்தளத்தைச் சிதைக்க நினைக்கும் கும்பலை தேர்தலில் அப்புறப்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.

