'நீட்' தீர்மானத்திற்கு எதிர்ப்பு பா.ஜ., வெளிநடப்பு
'நீட்' தீர்மானத்திற்கு எதிர்ப்பு பா.ஜ., வெளிநடப்பு
ADDED : ஜூன் 29, 2024 01:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:நீட் தேர்வு தொடர்பாக, சட்டசபையில் முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ., வெளிநடப்பு செய்தது.
சட்டசபையில் நடந்த விவாதம்:
பா.ஜ., - நயினார் நாகேந்திரன்: நீட் தேர்வு என்பது அவசியமானது; நியாயமானது. ஏழை மாணவர்களும் சிரமமின்றி படிக்கின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் ஊரில் மட்டும், 10 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவக் கல்லுாரியில் படிக்கின்றனர். மானுார் ஒன்றியத்தில், தோட்டத் தொழிலாளியின் மகள், எவ்வித கட்டணமுமின்றி மருத்துவம் படிக்கிறார்.
நீட் தேர்வில் ஏராளமான நன்மைகள் உள்ளன. நீட் தேர்வு நிச்சயமாக வேண்டும். எனவே, முதல்வரின் தீர்மானத்தை எங்களால் ஏற்க இயலாது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.