ADDED : ஜூன் 02, 2024 02:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:''பா.ஜ., 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையாக ஆட்சியை பிடிக்கும்,'' என்று பா.ஜ., மாநில பொதுச்செயலர் முருகானந்தம் தெரிவித்தார்.
திருப்பூரில் அவர் கூறியதாவது:
தெலுங்கானா தேர்தல்பொறுப்பாளராக பணியாற்றினேன். சத்தீஸ்கர், குஜராத், மேற்கு வங்க மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்தோம்.
அம்மாநிலங்களில், மக்கள் அந்தந்த மாநில அரசுக்கு எதிராக உள்ளனர். இந்த தேர்தலில் பா.ஜ., 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையாக ஆட்சி அமைக்கும். மூன்றாவது முறையாக மோடி பிரதமராவார்.
அடுத்து நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., அம்மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் என்றார்.

