ADDED : ஆக 17, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றத் தவறினால் வரும், 20ம் தேதி முதல் தமிழக பா.ஜ., சார்பில் தொடர் போராட்டம் நடக்கும் என்று அறிவித்திருந்தோம். இன்று இத்திட்டத்தை துவக்கி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
எங்களுடைய முக்கிய கோரிக்கை நிறைவேறி இருப்பதால் போராட்டம் கைவிடப்படுகிறது. விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும், தமிழக அணைகள் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை பா.ஜ., தொடர்ந்து குரல் கொடுக்கும். தமிழக அரசு அதன் மீதும் அக்கறை செலுத்தி, விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என நம்புகிறோம்.
- - அண்ணாமலை,
தமிழக பா.ஜ., தலைவர்.

