ADDED : ஜூன் 03, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மாத்துகண்மாய் கிராமத்தில் ப்ளூடூத் வெடித்ததில் ஒருவருக்கு காதில் காயமேற்பட்டது.
மாத்துகண்மாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் 55. இவர் நேற்று இரவு ப்ளூடூத் மூலம் அலைபேசியில் பாட்டு கேட்டுள்ளார். காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் ஹெட்செட் திடீரென்று வெடித்ததில் இவரது காதில் காயமேற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

