ADDED : செப் 18, 2024 05:02 AM

சென்னை:
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
வெளிநாடுகளில் உள்ள இந்திய துாதரகங்கள், பண்பாட்டு மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற, தமிழ் ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான விளம்பரத்தை, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், ஹிந்தி, சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு எதிரான இந்த நிபந்தனைகள் கண்டிக்கத்தக்கவை.
வெளிநாடுகளில் தமிழ் கற்பிக்க, பிறமொழி அறிவு அவசியம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆங்கிலத்தின் வழியாக யாருக்கு வேண்டுமானாலும், தமிழ் கற்றுக் கொடுக்க முடியும்.
ஹிந்தி, சமஸ்கிருத ஆசிரியர் பணிகளுக்கு தமிழ் மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழாசிரியர் பணிக்கு மட்டும், ஹிந்தி, சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அப்பட்டமான ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பாகும்; இதை அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.