ADDED : மார் 25, 2024 10:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில், வெடிகுண்டு வைத்து இருப்பதாக போலி புகாரை, இ - மெயிலில் அனுப்பிய கேரள சாப்ட்வேர் இன்ஜினியரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஐ.பி., முகவரியை வைத்து போலீசார் விசாரித்து, சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்க்கும் கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த முருகேஷ், 45, என்பவரை நேற்று கைது செய்தனர். எர்ணாகுளத்தில் பதுங்கியிருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

