ADDED : ஜூன் 23, 2024 03:59 AM
சென்னை : பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் பயன்படுத்தப்படாத நிலங்கள், ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தமிழ்நாடு வட்ட தலைமை பொது மேலாளர் வெங்கடேஸ்வரலு கூறியுள்ளதாவது:
பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவதால், பல்வேறு அலுவலகக் கட்டடங்கள் காலியாக உள்ளன. எனவே, சூலுார், மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, கடலுார் மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் உள்ள நிலங்கள், பொது ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.
ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், வரும் ஜூலை 1க்குள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94861 00871; 94373 45839 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
அத்துடன், https://tamilnadu.bsnl.co.in/rentspace_tn.html , https://www.mstcecommerce.com/auctionhome/propertysale/index.jsp, https://assetmonetization.bsnl.co.in ஆகிய இணையதளங்களையும் பார்வையிடலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
