மத்திய பட்ஜெட், வேலைவாய்ப்புகள் உருவாக்கம், உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், மேம்பாடு, தொழில் முனைவு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முன்முயற்சிகளை கொண்டுள்ளது.
வரும், 2030க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறவும், 2047ம் ஆண்டுக்குள் சமமான, அனைவரையும் உள்ளடக்கிய, வலிமையான மற்றும் நிலையான தன்னிறைவு பாரதத்தை உருவாக்கவும் இந்த பட்ஜெட் வலுவான அடித்தளம் அமைத்துள்ளது.
ரவி
தமிழக கவர்னர்
மத்திய அரசு பட்ஜெட், வடமாநிலங்களையும், பா.ஜ.,வின் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்த தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, சமநிலையோடு ஊக்குவிக்கக் கூடிய நிதிநிலை அறிக்கையாக இல்லை.
தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.
பழனிசாமி
அ.தி.மு.க., பொதுச்செயலர்
தற்போது, 14.6 லட்சம் புதிய புற்றுநோய் நோயாளிகள் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள சூழலில், கூடுதலாக மூன்று புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது, புற்றுநோய் சிகிச்சைக்காகும் செலவுகளை குறைக்க உதவும். மருத்துவ உபகரணங்களுக்கான அடிப்படை சுங்கவரியில் மாற்றங்கள் செய்யும் போது, உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கவும், குறைந்த செலவில் மேம்பட்ட தொழில்நுட்பம் கிடைக்கவும் உதவும்.
பிரதாப் சி ரெட்டி
அப்பல்லோ மருத்துவ குழும தலைவர்

