ADDED : ஜூலை 12, 2024 02:38 AM
சென்னை:இந்திய பட்டய கணக்காளர் அமைப்பான ஐ.சி.ஏ.ஐ., சார்பில், சி.ஏ., என்ற பட்டய கணக்காளர் தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலை தகுதித்தேர்வு, இடைநிலை தேர்வு மற்றும் இறுதி தேர்வு என, மூன்று நிலைகள் நடத்தப்படுகின்றன.
இதில், இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுகள், இந்த ஆண்டு மே மாதம் நடந்தன. இதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
இறுதித் தேர்வில் முதல் தொகுதியில், 74,887 பேர் பங்கேற்று, 20,479 பேரும்; 2வது தொகுதியில், 58,891 பேர் பங்கேற்றதில், 21,408 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு பிரிவுகளிலும், 35,819 பேர் தேர்வு எழுதி, 7,122 பேர், அதாவது, 19.88 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இடைநிலை தேர்வில் முதல் தொகுதியில், 1.17 லட்சம் பேர் பங்கேற்று, 31,978 பேரும்; 2ம் தொகுதியில், 71,145 பேர் பங்கேற்று, 13,008 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரண்டு தொகுதியிலும் சேர்த்து, 59,956 பேர் தேர்வு எழுதி, 11,041 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுககளை, https://www.icai.org/ இணையதளத்தில் அறியலாம்.

