தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ புற்றுநோயை கட்டுப்படுத்தும் கேக் பழம்

புற்றுநோயை கட்டுப்படுத்தும் கேக் பழம்

புற்றுநோயை கட்டுப்படுத்தும் கேக் பழம்


ADDED : ஏப் 28, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 28, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கேக் பழம் சாகுபடி குறித்து, திருத்தணி அடுத்த, கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:

மலை மண் சார்ந்த செம்மண் நிலத்தில், டிராகன் பழம், முள் சீத்தா பழம் உள்ளிட்ட பலவித பழங்களை சாகுபடி செய்துள்ளேன். அதில், மிளகு, திப்பிலி உள்ளிட்ட மருத்துவ குணம் நிறைந்த விளைப்பொருட்களை ஊடுபயிராக சாகுபடி செய்துள்ளேன்.

அந்த வரிசையில், கேக் பழம் சாகுபடி செய்துள்ளேன். அதற்கு ஏற்ப, பந்தல் மற்றும் சொட்டு நீர் பாசன கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி உள்ளேன். கொடி நன்றாக படர்ந்து, மகசூல் கிடைக்க துவங்கி உள்ளது.

குறிப்பாக, புற்றுநோயை கட்டுப்படுத்தும் முள் சீத்தா பழம் செடியில் விளைகிறது. அதே சாயலில் இருக்கும் கேக் பழம், கொடியில் விளைகிறது.

காய்க்கும் போது பச்சை நிறத்திலும், பழுக்கும் முன் மஞ்சள் நிறத்திலும், பழுத்த பின் இளஞ்சிவப்பு நிறம் என, மூன்று நிறம் மாறும் வித்தியாசமான பழமாக உள்ளது.

புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் சிறப்பு வாய்ந்த பழமாக திகழ்வதால், கூடுதல் விலை கொடுத்து வாங்கவும் மக்கள் தயக்கம் காட்டுவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு:

– கே.வெங்கடபதி,

93829 61000.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us