காந்திகிராம பல்கலையில் சேர்க்கை அறிவிப்பு கியூட் எழுதாதவர்களும் விண்ணப்பிக்கலாம்
காந்திகிராம பல்கலையில் சேர்க்கை அறிவிப்பு கியூட் எழுதாதவர்களும் விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 04, 2024 11:14 PM
சின்னாளபட்டி:திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலையின் இளங்கலை படிப்புகளில் சேர கியூட் எழுதாத மாணவர்களும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பல்கலையின் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான 2024- -25 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை, கியூட்(பொது நுழைவுத் தேர்வு) மதிப்பெண் அடிப்படையில் நடக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது கியூட் தேர்வு எழுதியோர் மட்டுமின்றி எழுதாத மாணவர்களும் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக காந்திகிராம பல்கலை அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கியூட் எழுதிய, எழுதாத மாணவர்களும் ஜூலை 5 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பல்கலையின் இணையதளம் www.ruraluniv.ac.in மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.