அரசியல் சாணக்கியர் ஆர்.எம்.வீரப்பன் வாழ்க்கை பாதை...
அரசியல் சாணக்கியர் ஆர்.எம்.வீரப்பன் வாழ்க்கை பாதை...
ADDED : ஏப் 10, 2024 02:52 AM
1926 செப்., 9ல் அறந்தாங்கியில் பிறந்தார்.
திராவிட கொள்கையால் ஈர்க்கப்பட்டு, அண்ணாதுரையுடன் பழகும் வாய்ப்பு பெற்றார். அவரது அறிவுறுத்தலின் படி, எம்.ஜி.ஆர்., நாடக மன்றத்தின் மேனேஜராக பொறுப்பேற்றார்.
1958: எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ் நிர்வாக இயக்குனரானார்.
1964: 'சத்யா மூவீஸ்' நிறுவனத்தை தொடங்கி எம்.ஜி.ஆரை வைத்து தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக் ஷாக்காரன், இதயக்கனி உட்பட வெற்றிப்படங்களை தயாரித்தார்.
அ.தி.மு.க., வை எம்.ஜி.ஆர்., துவக்கிய போது, ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார்.
1977 : எம்.ஜி.ஆர்., ஆட்சியில் ஹிந்து அறநிலையத்துறை, உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
1970 - 1980களில் அ.தி.மு.க., வின் சாணக்கியர் என அழைக்கப்பட்டார்.
1987: எம்.ஜி.ஆர்., மறைவுக்குப்பின் அ.தி.மு.க., இரண்டாக பிரிந்தது. அப்போது எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகியை முதல்வராக்கியதில் முக்கிய பங்கு வகித்தார்.
1989 : ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வில் இணை பொதுச்செயலர்.
1991 : ஜெயலலிதா அமைச்சரவையில் கல்வி, இளைஞர் நலன் அமைச்சராக இருந்தார்.
1995: பாட்ஷா பட வெற்றி விழாவில் ரஜினி பேச்சால் அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கம். எம்.ஜி.ஆர்., கழகத்தை துவக்கினார்.
2004: லோக்சபா தேர்தலில் (2004) தி.மு.க., வுக்கு ஆதரவளித்தார்.
2024 ஏப்., 9: உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

