ADDED : ஆக 20, 2024 04:17 AM

மருத்துவமனைகள், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பில், மாநில அரசுகளின் உரிமைகள் பாதிக்காத வகையில், மத்திய சட்டத்தை அமல்படுத்த வேண்டும். டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், மருத்துவமனைகள் மீது தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவ மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்த, டாக்டர்கள் மற்றும் மாணவர்கள் நல வாரியம் ஏற்படுத்துவதுடன், மாணவர்களுக்கான விடுதி, கல்லுாரி வளாகத்திலேயே இருப்பதை உறுதி செய்தல் அவசியம்.
அத்துடன், மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு குழு அமைத்து, அவர்களின் பாதுகாப்பையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். கோல்கட்டா பயிற்சி மாணவி பாலியல் வன்கொடுமையில், அம்மாநில அரசு மற்றும் மத்திய அரசு அலட்சியமாக செயல்பட்டு வருகிறது.
- ஜி.ஆர்.ரவீந்தரநாத்
செயலர், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்.

