சென்னை - குருவாயூர் உள்ளிட்ட ரயில்களின் சேவையில் மாற்றம்
சென்னை - குருவாயூர் உள்ளிட்ட ரயில்களின் சேவையில் மாற்றம்
ADDED : ஆக 03, 2024 12:34 AM
சென்னை:மதுரையில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளதால், சென்னை - குருவாயூர் உள்ளிட்ட சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு:
மதுரை - ராமநாதபுரம், ராமநாதபுரம் - மதுரை பயணியர் ரயில்கள் வரும் 5, 6, 8, 9, 11ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது
குருவாயூர் - எழும்பூர் இரவு 11:15 மணி ரயில் வரும் 4, 5, 8, 10ம் தேதிகளில் விருதுநகர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக இயக்கப்படுகிறது. அதனால், இந்த ரயில் மதுரை, திண்டுக்கல் வழியாக செல்லாது
எழும்பூர் - குருவாயூர் காலை 9:45 மணி விரைவு ரயில் புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது. அதனால், திண்டுக்கல், மதுரை, கொடைக்கானல் ரோடு வழியாக செல்லாது
மயிலாடுதுறை - செங்கோட்டை நண்பகல் 12:00 மணி ரயில் புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர் வழியாக செல்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.